கேலாங் அருகே நிகழ்ந்த விபத்தில் கால்வாயில் பாய்ந்து கார் நசுங்கிய தால் ஓட்டுநர் அதே இடத்தில் காரை கைவிட்டுவிட்டு ஓடி விட்டார். சிம்ஸ் வேயில் மவுண்ட்பேட் டன் ரோட்டை நோக்கிச் செல்லும் பாதையில் ஞாயிறு இரவு 8.50 மணியளவில் விபத்து நிகழ்ந்தது என்று போலிஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதில் யாரும் காயம் அடைய வில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் சொன்னார். கேலாங் லோரோங் 6ல் நிகழ்ந்த விபத்தின் புகைப்படத்தில் வெள் ளை நிறக்காரின் முன்பக்கம் நசுங் கியிருப்பதைக் காண முடிந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த 73 வயது முதியவர் ஒருவர், காப்பிக் கடைக்கு அருகே தாம் இருந்த போது வேகமாக கார் பாய்ந்ததாகக் கூறினார்.
கால்வாயில் இறங்கிய கார். இருவர் உதவியுடன் வெளியே வந்த ஓட்டுநர் தப்பிவிட்டார். படம்: ஷின் மின்

