துல்லிய பயிற்சியில் கடலோரக் காவல் படை

துல்லிய பயிற்சியில் கடலோரக் காவல் படை

1 mins read
31e8bc59-0304-4011-a668-768f01eea3cd
-

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிக ரித்துள்ள நிலையில், கடற்துறைச் சவால்களை எதிர்கொள்ளும் வித மாக சிங்கப்பூர் போலிஸ் படையின் கடலோரக் காவல் படையினர் யதார்த்த சூழலுடன் கூடிய பயிற் சிக்கும் நவீன சாதனங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பிரானி தீவில் இருக்கும் தங் களது தலைமையகத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் செய்தியா ளர்கள் முன் கடலோரக் காவல் படையினர் (பிசிஜி) துல்லியப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 55 கடல் மைல் (நாட்) வேகத்தில் படகைச் செலுத்தி, முன்னே வேகமாகச் சென்ற சந்தேகத்திற்குரிய படகை இடைமறித்து, அதே வேகத்தில் தமது படகில் இருந்து அந்தப் படகில் குதிக்கும் அபாயகரமான பயிற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட் டனர். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சி களில் கடலோரக் காவல் படை யினர் பிரத்தியேக சவால்களை எதிர்கொள்வதாக அப்படையின் தலைமைச் செயல்பாட்டு, பாது காப்பு அதிகாரியான சூப்பரின் டெண்டென்ட் லின் ஸென்சியாங் குறிப்பிட்டார். திடீரென மாறும் கடல் சூழல், எதிர்கொள்ளும் படகு, கப்பல் களின் வகைகள் ஆகியவை அவற்றில் சில. "இத்தகைய சவால்களுக்கு ஏற்ப தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக எமது அதிகாரி கள் யதார்த்தமான சூழ்நிலைகளில் கடுமையான பயிற்சியில் ஈடுபடு வதை உறுதிசெய்கிறோம்," என் றார் திரு லின்.

அபாயகரமான பயிற்சியை மேற்கொள்ளும் கடலோரக் காவல் படையினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்