சாங்கி விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்யும் பயணி கள் அனைவரும் இனி தங்கள் நேரத்தைத் தாங்களே கவனித்துக் கொள்ளவேண்டும். ஜனவரி மாதம் 1ஆம் தேதியி லிருந்து விமானத்தின் கடைசிநேர அழைப்புகள் இனி இருக்காது. குறிப்பிட்ட பயணிகளுக்கான அழைப்புகளும் இனி விமான சேவைகளால் செய்யப்படாது. இந்தப் புதிய நடைமுறையால் மற்ற முக்கிய அறிவிப்புகள் செய் யப்படும்போது பயணிகளும் வரு கையாளர்களும் அவற்றைக் கூர்ந்து கவனிக்கமுடியும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது. புதிய மாற்றத்தால் மேற்கொள் ளப்படும் அறிவிப்புகளின் எண் ணிக்கை பாதியாகக் குறையும் என்றும் அதனால் இனிமை தரும் அமைதி நிறைந்த விமான நிலை யமாக சாங்கி திகழும் என்றும் குழுமம் தெரிவித்தது.
சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில் உள்ள தானியக்க சுய பயண உறுதிச் சாதனங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

