ஆராய்ச்சி, புத்தாக்கச் செயல்களில் அதிகமான பிள்ளைகள் ஈடுபடவேண்டும்

ஆராய்ச்சி, புத்தாக்கச் செயல்களில் அதிகமான பிள்ளைகள் ஈடுபடவேண்டும்

1 mins read
37dd4a35-4724-4561-8f49-c5e11c48cc70
-

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை ஒரு மணி நேரம் 20 நிமி டங்களுக்கு தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி மாணவிகள் தங் களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடலாம். உதாரணத்துக்கு, நிகழ்ச்சி ஒத்திகை, பாடத் திட்டங்கள், சக மாணவிகளுடன் கலந்துரையாட லில் ஈடுபடுதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடலாம். அதில் ஆசிரியர்கள் சம்பந்தப்படக்கூடாது என்பது பள்ளி விதிமுறை.

இந்த உதாரணத்தைச் சுட்டிக் காட்டி, பள்ளிகள் தங்கள் மாணவர் கள், அவர்களுக்கு விரும்பமான செயல்கள் பற்றி அறிந்துகொண்டு, அவற்றில் ஈடுபட நேரம் ஒதுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் தெரி வித்துள்ளார். "இப்படி சிறப்பாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மாணவர்கள் தங்கள் சிந்தையை முடுக்கி விட்டு, புதியவற்றை ஆராய்ந்து, அதில் பலவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. "புத்தாக்கம் என்பது திடீரென ஒருவரது சிந்தனையில் தோன் றும் ஒன்றல்ல. மாறாக, அதைப் பற்றிய தொடர் சிந்தனையே புத் தாக்கத்துக்கு வழி வகுக்கும்," என்று அமைச்சர் விவரித்தார்.

புதிய பள்ளிகளுக்கு முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுடனும் பதவி ஓய்வுபெறும் முதல்வர்களுடனும் உரையாடுகிறார் கல்வி அமைச்சர் இங் சீ மெங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்