அகலமான நடைபாதைகள், சக்கர நாற்காலிகள், நடமாட்டக் கருவிக ளுக்கான சரிவுப்பாதைகள் என முதியோருக்குத் தேவையான வசதிகளுடன் புதுப்பிப்புப் பணிக ளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட் டுள்ளது புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம். செப்டம்பரில் மூடப்பட்ட இச் சந்தை இரண்டு மாதப் புதுப் பிப்புப் பணிகளுக்குப் பிறகு நவம் பர் மாதத்தில் திறக்கப்பட்டாலும் நேற்று அதிகாரபூர்வ திறப்பு விழா வைக் கொண்டாடியது.
தஞ்சோங் பகார் நகர மன் றத்தின் பழுதுபார்ப்பு, மறுஅலங் கரிப்புத் திட்டத்தின் கீழ் புதுப்பிக் கப்பட்டுள்ள 40 ஆண்டு பழமை வாய்ந்த இந்த உணவங்காடி நிலையத்தில் இப்போது இலவச 'வைஃபை' வசதியும் சேர்க்கப்பட் டுள்ளது. புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் 84 உணவுக் கடைகள், 70 சந்தைக் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் உள்ளன. தஞ்சோங் பகார் குழுத் தொகு தியின் நாடாளுமன்ற உறுப்பினர்க ளான பிரதமர் அலுவலக அமைச் சர் சான் சுன் சிங்கும் திருவாட்டி ஜோன் பெரேராவும் நேற்றைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட னர்.
முதியவர்களுக்கும் உடற்குறையுள்ளவர்களுக்கும் தேவையான பல வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும் புதுப்பிக்கப்பட்ட புக்கிட் மேரா வியூ உணவங்காடி நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

