பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் நல்ல தொரு தகவலை வெளிப்படுத்தி உள்ளார். சிங்கப்பூரின் பொருளி யல் கடந்த ஆண்டு எதிர்பார்ப்பை விட சிறப்பாக 3.5 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டது என்பதே அத்தகவல். நாட்டின் நீண்டகால சவாலாக விளங்கி வந்த நமது உற்பத்தித்திறன் புத்தெழுச்சி கண் டது பொருளியல் வளர்ச்சியின் முக்கிய பங்காக அமைந்துவிட்டது என்றார் அவர். இந்த வளர்ச்சி, ஆண்டின் தொடக்கத்தில் முன்னுரைக்கப் பட்டதைக் காட்டிலும் இருமடங்கு. கடந்த பத்தாண்டுகளில் அர சாங்கம் எவ்வளவோ முயன்றும் சிங்கப்பூரின் உற்பத்தித்திறன் போதுமான வளர்ச்சியின்றி நீடித் தது.
ஆனால் 2017ல் நமது பொரு ளியல் வளர்ச்சியை அது 3 விழுக் காட்டுக்கும் பின்னர் 3.5 விழுக் காட்டுக்கும் உயர்த்திவிட்டது. இதற்கு உலகப் பொருளியல் மேம்பட்டு வருவதும் சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் வரு கையைக் கட்டுப்படுத்தியதும் முக் கிய காரணங்கள் என்று ஆய் வாளர்கள் கூறுகிறார்கள். சிங்கப்பூரர்கள் புதிய திறன் களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்றும் வர்த்தகங்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப் பதாகவும் தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ள பிரதமர் லீ, இவ்வாறு செய்வதன் மூலம் தான் நாம் தொடர்ந்து போட்டித்தன் மையுடன் நீடிப்பதோடு எதிர்காலச் சவால்களுக்குத் தயாராக இருக்க முடியும் என்றார்.
பிரதமர் லீ சியன் லூங் அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

