முஹம்மது ஃபைரோஸ்
சிராங்கூன் சாலையில் அமைந் துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு பிரார்த்தனை மேற்கொள்ள திருமதி மாலினி செந்தில்ராஜ் வாராவாரம் தவறா மல் வந்துவிடுவது வழக்கம். புத்தாண்டை முன்னிட்டு நேற்று இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள தமது கணவர், 3 வயது மகன் மிதிலேஷ்வர் ஆகி யோருடன் நண்பகல் வாக்கில் வந்திருந்தார் 30 வயது திருமதி மாலினி. உலக அமைதிக்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் இன, சமய ஒற்றுமைக்கும் குடும்ப உறுப்பினர் களின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் கடவுளிடம் தாம் வேண்டியதாக அவர் குறிப்பிட்டார்.
"ஒவ்வோர் ஆண்டும் புத் தாண்டு அன்று இந்த ஆலயத் திற்கு வந்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு உணவகத்தில் குடும்பத்துடன் ஒன்றாக பகல் உணவைச் சாப்பிடுவோம்," என்று மேலும் சொன்னார் அவர். காலையில் பெய்த மழையைப் பொருட்படுத்தாமல் உள்ளூர் வாசிகளுடன் இந்த ஆலயத்திற்கு ஏராளமான வெளி நாட்டு ஊழியர் களும் படையாகத் திரண்டு வந்திருந்தனர்.

