செந்தோசா ரிசோர்ட்சில் கூரை சரிந்ததில் நால்வர் காயம்

1 mins read
e6105a4b-e168-49cb-b6ad-3a6501f01ffa
-

செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்டு உல்லாசத்தளத்தில் செவ்வாய்க் கிழமை காலை உட்கூரை சரிந்து விழுந்ததில் நால்வர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் காலை சுமார் பத்து மணியளவில் நடந்தது. சம்பவம் பற்றி காலை 10.13 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. உல்லாசத்தளத்தின் சூதாட்டக் கூடத் தின், இடைநிலை மாடிப் பகுதிக்கு இட்டுச்செல்லும் பகுதி யின் கூரைப் பகுதி சரிந்து விழுந் ததாக செந்தோசா ரிசோர்ட்ஸ் வோர்ல்டு உல்லாசத் தளத் தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார். வெளி கட்டுமானக் குத்தகை யாளர்கள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டிருந்த போது இச்சம்ப வம் நடந்ததாக அவர் விவரித்தார்.

"சம்பவம் நடந்தபோது, அப் பகுதியில் விருந்தினர்கள் எவரும் இல்லை. ஒரு பாதுகாப்பு அதிகா ரி க்கும் மூன்று வெளி கட்டுமான குத்தகைக்காரர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன," என்றார் அந்தப் பேச்சாளர். அந்தப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முழுமையான பாதுகாப்பு பரிசீலனைகள் முடி வடைந்த பின்னர் அப்பகுதி பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். "எங்கள் விருந்தினர்கள், ஊழி யர்களின் பாதுகாப்பே எங் களுக்கு மிக முக்கியம்," என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.