மலேசிய சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிங்கப்பூரர்கள் மரணம்

மலேசிய சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிங்கப்பூரர்கள் மரணம்

1 mins read
f90ae8cb-cd60-4532-ae8e-26d3fed020cf
-

மலேசிய நகரான போர்ட் டிக்சனில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில் நான்கு சிங் கப்பூரர்கள் மாண்டனர். ஜாலான் லுகுட் செப்பாங்கில் பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஒரு லாரி, ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அந்த கார்களில் ஒன்றான ஹோண்டா ஸ்ட்ரீம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. டிப்பர் லாரி ஒன்றால் அந்த கார் மோச மாக நசுக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.

அந்த காரில் சிங்கப்பூர் குடும்பம் ஒன்று பயணம் செய்த தாகவும் அக்குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிங்கப்பூரர்கள் விபத்தில் சிக்கி மாண்டுவிட்ட தாகவும் போர்ட் டிக்சன் தலைமை போலிஸ் அதிகாரி ஜைனுதீன் அகமது 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார். மைமுனா சபாரி, 51, நூர் அமலினா ரோஸ்லி, 21, டயானா சாரா ரோஸ்லி, 18 ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரை ஓட்டிச் சென்ற ரோஸ்லி சமத், 54, சிரம்பான் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாண்டதாக திரு ஜைனு தீன் கூறினார்.

லாரியில் சிக்கி நசுங்கிய கார் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. அந்த காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிங்கப்பூரர்கள் மாண்டனர். மூவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். படம்: மலேசிய போலிஸ்