வார இறுதி நாட்களில் ரயில் நிலையங்களில் அதிக ஊழியர்கள்

வார இறுதி நாட்களில் ரயில் நிலையங்களில் அதிக ஊழியர்கள்

1 mins read
deb86e24-5b18-45c8-acaa-f82edd6daf4e
-

எம்ஆர்டி ரயில்கள் இரண்டாவது மாதமாக வார இறுதி நாட்களில் குறைவான நேரமே செயல்படும். இந்த ஏற்பாடு இன்று இரவு முதல் தொடங்குகிறது. இதனை யொட்டி எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்குகிறது. நிலையங்களில் சுமார் 300 ஊழியர்கள் முன்பு பணியாற்றி னர். இப்போது 600 பேர் பணி யாற்றுவர். இந்த ஜனவரி மாதத் தில் கிழக்கு-மேற்கு வழித்தடத் தில் பாய லேபார் முதல் பாசிர் ரிஸ் வரை சாங்கி விமானநிலை யம், எக்ஸ்போ ரயில் நிலையங்கள் ஆகியவற்றுடன் மொத்தம் 10 எம்ஆர்டி நிலையங்கள் வார இறுதி நாட்களில் குறைவான நேரமே செயல்படும். இரண்டு ஞாயிற்றுக்கிழமை களில் முழு நேரம் அவை மூடப் படும்.

இந்த ஏற்பாடு இத்துடன் 2வது தடவையாக இடம்பெறு கிறது. கடந்த டிசம்பர் மாதம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 17 நிலையங்களும் வடக்கு-தெற்கு வழித்தடத்தில் உள்ள இரண்டு நிலையங்களும் வார முடிவு நாட்களில் குறைவான நேரமே செயல்பட்டன. ஊழியர்களை அதிகமாக பணியில் ஈடுபடுத்துவதோடு, சுமார் 600 பேருந்து ஓட்டுநர்கள் 300 பேருந்துகளை ஓட்டிச்சென்று இடைவழிப் பயண வசதியைப் பயணிகளுக்கு ஏற்படுத்தி தரு வார்கள் என்றும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் இந்த மாதம் வார இறுதி நாட்களில் ரயில் நிலைய வேலை நேரத்தில் இடம்பெறும் மாற்றங்களைக் காட்டும் தகவல்கள் சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் இடம்பெற்று இருக்கின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்