பிரதமர் லீ: மாணவர்களுக்கு ஆதரவளிப்பது அவசியம்

பிரதமர் லீ: மாணவர்களுக்கு ஆதரவளிப்பது அவசியம்

1 mins read
68d3a553-6019-4e8e-a57a-73f6a87f1d4f
-

உதவி தேவைப்படும், குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை அடையா ளம் கண்டு, தொடக்கத்திலேயே ஆதரவு வழங்கியது அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சமூக, பொருளியல் அளவில் கடைசி கால் பகுதியில் உள்ள சிங்கப்பூர் மாணவர்களில் ஏறக் குறைய பாதிப் பேர், செயல்பாடு களைப் பொறுத்தமட்டில் அனைத் துலக அளவில் முதல் கால் பங்கில் இடம்பெற்றுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார். டௌன்ஸ்வில் தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்த விருது நிகழ்ச்சியின்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு நிறுவனத்தின் அண் மைய அறிக்கையைச் சுட்டி அவ ரது இந்தப் பேச்சு அமைந்தது. அத்தகைய மாணவர்களின் செயல்பாடுகள் குடும்பப் பின்ன ணியை அடிப்படையாகக் கொண்ட முன்னுரைப்பை மிஞ்சுவதாக இருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

டௌன்ஸ்வில் தொடக்கப் பள்ளியில் நடந்த கல்வி உதவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களிடம் மகிழ்ச்சியுடன் உரையாடி, வாழ்வில் முன்னேற அவர்களை வாழ்த்தும் பிரதமர் லீ சியன் லூங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்