100வது செயற்கைக்கோளை விண்ணில் பாய்ச்சி இந்தியா சாதனை

100வது செயற்கைக்கோளை விண்ணில் பாய்ச்சி இந்தியா சாதனை

1 mins read
fd59534d-8347-4e6f-b877-b6769aef15ff
-

இவ்வாண்டின் முதல் செயற்கைக் கோளையும் ஒட்டுமொத்தமாக நூறாவது செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட் டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து நேற்றுக் காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. கார்ட்டோசாட்-2 வகை, மைக்ரோ சாட், நேனோ செயற்கைக்கோள் என இந்தியாவின் மூன்று செயற் கைக்கோள்கள், அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, பிரிட்டன், தென்கொரியா, கனடா ஆகிய நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக் கோள்களை அந்த ராக்கெட் சுமந்து சென்றது.

கார்ட்டோசாட்-2 வரிசையில் அனுப்பப்பட்ட 710 கிலோ எடை கொண்ட ஏழாவது செயற்கைக் கோள் பூமியிலிருந்து 510 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப் பட்டது. இதன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். இதன்மூலம் பூமியின் வளங்களைப் படமெடுக்கவும் எல்லைப் பகுதியில் எதிரிகளின் நடமாட்டத்தைத் துல்லியமாக அறியவும் முடியும். செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக ஏவிய இஸ்ரோவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் மூலம் பூமியைப் பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் திறன் படைத்த கார்ட்டோசாட்-2 வகை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி, வெற்றிகரமாக நிலைநிறுத்தியதை மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் இஸ்ரோ தலைவர் கிரண் குமார் ரெட்டி (இடமிருந்து 2வது) தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு. படம்: ஏஎஃப்பி