சோமர்செட் சாலையில் நீர்க் குழாய் கசிவு; தடங்கள் மூடப்பட்டன

சோமர்செட் சாலையில் நீர்க் குழாய் கசிவு; தடங்கள் மூடப்பட்டன

1 mins read
ddd1a63a-16a6-4140-b3a2-a930d737e3e9
-

சோமர்செட் சாலையில் ஏற்பட்ட நீர்க் குழாய் கசிவால் சாலைத் தடங்கள் நேற்று காலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. 111 சோமர்செட் சாலையில் அமைந்துள்ள 'டிரிப்பல்ஒன் சோமர்செட்' அருகே நேற்று அதிகாலை 12.40 மணிக்கு பொதுப் பயனீட்டுக் கழகத்திற்குத் தகவல் கிடைத்ததாக கூறப்பட்டது. பழுது பார்ப்பதற்குக் குழுவினரை அனுப்பிய கழகம், சாலையின் நான்கு தடங்களில் மூன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக மூடப்பட்டு உள்ளதாக காலை 6.41 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது. பிறகு காலை 7.59 மணிக்கு ஒரு தடம் மட்டுமே மூடப்பட்டிருப்பதாக கழகம் கூறியிருந்தது. அந்தப் பகுதிக்கு அருகிலிருந்த சில கட்டடங்களில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சாலையின் ஒரு பகுதி உடைந்திருந்ததாக வும் அது பள்ளத்தில் மூழ்கியிருந்ததாகவும் கூறப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்