சிங்கப்பூர், மலேசியா எல்லைகளை இணைக்கும் பெருவிரைவு ரயில் போக்குவரத்துக்கான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று நேற்று கை யெழுத்தானது. சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த்=மலேசியா வின் ஜோகூர் பாரு இடை யிலான 'ஆர்டிஎஸ் லிங்க்' என் னும் பெருவிரைவு ரயில் சேவை இணைப்புக்கான 4 கிலோ மீட்டர் நீள பாதையின் கட்டுமானப் பணி கள் அடுத்தாண்டு தொடங்கும் என ஒப்பந்தம் தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அந்தப் பணிகள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படு கிறது.
சிங்கப்பூர் தரப்பில் உள்கட்ட மைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான கோ பூன் வான், மலேசியத் தரப்பில் பிரதமர் அலு வலக அமைச்சர் அப்துல் ரஹ் மான் டஸ்லான் ஆகியோர் ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டனர். இஸ்தானாவில் நடைபெற்ற கையெழுத்துச் சடங்கை சிங்கப் பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் பார்வையிட்டனர். பெருவிரைவு ரயில் சேவை நடப்புக்கு வருவதன் மூலம் பய ணிகள் இடைவெளியில்லாப் பய ணத்தை அனுபவிப்பர்.

