சிங்கப்பூர் குடியரசு விமானப் படை 50வது ஆண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. அதனைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. ஆகாய திறன்விளக்கக் காட்சி கள், கண்காட்சிகள் பலவும் அவற் றில் அடங்கும். The RSAF50@ Marina Barrage என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 11=12 தேசிய நாள் பேரணி வாரமுடிவின்போது இடம் பெறும். அதில் 20க்கும் அதிக விமானங்கள் மரினா பே உயரே அணிவகுத்துச் செல்லும். முதல் தடவையாக ஆளில்லாத வானூர்திகளும் ஆகாயத்தில் திறன்காட்டும். ஹெலிகாப்டர்கள், போர்விமானங்கள் சாகசமும் இடம் பெறும். பிடோக், செம்பவாங், பொங் கோலில் கண்காட்சிகள் வார முடி வில் இரண்டு நாட்களுக்கு நடக் கும். இவற்றில் நேரடி திறன் விளக்கக்காட்சிகளும் இடம்பெறும். சிங்கப்பூர் குடியரசு விமானப் படை வழிகாட்டி குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கெல்வின் கோங் இந்நிகழ்ச்சி விவரங்களை அறிவித்தார். மேல்விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும்.
விமானப்படை 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள்
1 mins read
-

