'பத்மாவத்' படவெளியீட்டினால் இந்தியாவின் பல இடங்களில் வன்செயல், கைது நடவடிக்கை

1 mins read
05f65b1c-ad2d-4e7d-9c8f-701d25accc33
-

இந்தியாவில் பத்மாவத் என்ற திரைப்படம் இன்று நாடு முழுவதும் 3,000 திரையரங்கு களிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏறக் குறைய 475 திரையரங்குகளிலும் வெளி யிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியாவின் பல இடங்களிலும் வன்முறைகள் மூண்டுள் ளன. குஜராத்தில் பல திரையரங்குகள் கொளுத்தப்பட்டன. ஏராளமான வாகனங் கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தீ மூட்டப்பட்டதாகவும் தகவல்கள் கூறின. திரையரங்குகளுக்குக் கடும் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் கலவரத்தில் ஈடுபட்ட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படம், ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாற்றைத் தவறாக திரித்து காட்டுவதாகக் கூறப்படு கிறது. இதை எதிர்த்து ஏற்கெனவே போராட்டங்கள் நடந்ததன் விளைவாக படத்தின் பெயரை 'பத்மாவத்' என மாற்றியும் காட்சிகளை மாற்றி அமைத்தும் வெளியிட திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. படத்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு களும் தள்ளுபடி செய்யப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடைகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.