செலாராங் ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள புதிய, விரிவாக்கப்பட்ட தயார்நிலை மற்றும் ஆயத்த நிலையத்தில் முதன் முறையாக தயார்நிலைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. திருப்பி அழைக்கப் படும் தேசிய சேவையாளர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் கொண்டது இந்த நிலையம். கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட பயிற்சியில் மொத்தம் 8,000 பேர் கலந்து கொண்டனர். 700 வாகனங்கள் பயிற்சியில் பங்கேற்றன. போலிஸ் படையினருடன் இணைந்து சிங்கப்பூர் ராணுவப் படையினரால் நடத்தப்பட்ட இந்த பாதுகாப்புப் பயிற்சி 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் ஆகப் பெரிய பயிற்சி என்று கூறப்பட்டது.
செலாராங் ராணுவ முகாமின் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நான்குமாடி கட்டட வளாகத்தில் சேவையாளர்கள் முகாமில் தாங் களாகவே பதிவுசெய்துகொள் வதற்கான சுய சேவை கணினிப் பொறியகம் போன்றவை வீரர் கள் ஆயத்தமாவதற்காகுமான நேரத்தைக் குறைத்ததோடு குறை வான வளங்களுடன் திறன் மிகுந்ததாக இருந்தது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியின்போது தங்களது ஆயு தங்கள், உடைமைகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை சேவையாளர்கள் பரிசோதித்தனர். தீவின் பல பகுதிகளில் பயங்கர வாதத் தாக்குதல் நடத்தப்படு வதுபோன்ற பாவனையும் தேசிய விளையாட்டரங்கில் அத்தகைய தொரு பாவனைத் தாக்குதலை முறியடிக்கும் பணியையும் வீரர் கள் மேற்கொண்டனர்.
செலாராங் ராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்ட தேசிய சேவையாளார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

