மரக்கிளை ஒன்று திடீரென்று முறிந்து சாலையில் சென்றுகொண்டு இருந்த கார் மீது விழுந்ததில் காரிலிருந்த மூவர் சுமார் பத்து நிமிடம் உள்ளே மாட்டிக்கொண் டனர். கேலாங் லோரோங் 17ல் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சிம்ஸ் அவென்யூவை நோக்கிச் சென்றுகொண்டு இருந்த ஹுயுண்டாய் எலண்ட்ரா கார் மீது பலத்த சத்தத்துடன் பெரிய மரக்கிளை விழுந்தது.
அதில் அந்த காரின் மேற்பகுதி வளைந்து பலத்த சேதமடைந்ததுடன் முன்பக்கமும் பின்பக்கமும் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாக காரை ஓட்டிச் சென்ற 62 வயது பொறியாளர் 'ஷின் மின்' நாளிதழிடம் தெரிவித்தார். தம்மை லி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த ஆடவர், 50களில் உள்ள தமது தோழியுடனும் தோழியின் 29 வயது மகளுடனும் காரில் சென்றுகொண்டிருந் ததாகக் கூறினார். தங்களது இருப் பிடத்தை அடைய ஐந்து நிமிடங்களே இருந்த சமயத்தில் மரக்கிளை காரின் மீது விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
காருக்குள் மாட்டிக்கொண்டவர்கள் தாங்களாக வெளியே வந்துவிட்டபோதிலும் அவ்வழியே சென்ற ஆறு பேர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். படம்: ஷின் மின்

