வர்த்தகம் மேம்பட மின்னிலக்க முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எஸ்ஐஏ

வர்த்தகம் மேம்பட மின்னிலக்க முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எஸ்ஐஏ

1 mins read
6db08463-7c01-4062-b5fd-9bca337b6af9
-

பயணிகளுக்கும் தனக்கும் பலன் அளிக்கும் வகையில் மின்னி லக்கத் தொழில்நுட்பம் வழி வர்த்தகத்தை மேம்படுத்த அரசாங்க அமைப்புகளுடனும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் துடனும் (என்யுஎஸ்) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இணைந்து செயல்பட இருக்கிறது. உதாரணத்துக்கு, விமானத் தின் முக்கிய பாகங்கள் எப்போது பழுதுபார்க்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்பதை முன்னுரைக்கும் வழியை உருவாக்க 'ஏ ஸ்டார்' அமைப்புடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து செயல்படுகிறது.

விமானப் பராமரிப்பு தரவுகள் குறித்து தெளிந்த ஆழ்ந்த தகவல் களைப் பெற 'ஏ ஸ்டார்' அமைப் பின் தரவுப் பகுப்பாய்வு நிபுணர் களின் உதவியை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நாடுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த முயற்சிக்கு மின்னிலக்கப் புத்தாக்கச் செயல்திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இச்செயல் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப் பட்டது. மின்னிலக்கப் பெருந் திட்டத்தின் அறிமுக விழா சாங்கி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள எஸ்ஐஏ பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

மின்னிலக்கப் புத்தாக்கச் செயல்திட்டத்தின் அறிமுக விழாவில் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ்.ஈஸ்வரன் (வலது), சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்