மூப்படையும் சமுதாயத்திற்கு ஏற்ற சுகாதாரப் பராமரிப்பு

மூப்படையும் சமுதாயத்திற்கு ஏற்ற சுகாதாரப் பராமரிப்பு

1 mins read
be264c9a-675e-4fb1-918b-9dfabbd9583e
-

பொது மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு பிறகு வீடு திரும்பும் நோயாளிகளுக்கு வீட்டில் இருந்த படி அவரவரின் உடல்நிலையைப் பராமரித்துக்கொள்ள பொது மருத் துவமனைகளும் இதர சேவை வழங்குபவர்களும் இணைந்து உதவும் திட்டம் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதுவரை அந்தத் திட்டத் தின் மூலம் சுமார் 8,000 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று தெரி விக்கப்பட்டது.

'மருத்துவமனை முதல் வீடு வரை' எனும் அந்தத் திட்டம் ஒருங்கிணைந்த பராமரிப்பு வாரி யத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சேவைகளை வழங்க சிங்கப்பூரின் மூன்று வட்டார சுகாதாரப் பராம ரிப்பு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் வீட்டுக்குச் சென்று பார்ப்பது மூலமாகவும் தாதியர்கள், மருத்துவர்கள், விவகார மேலாளர் கள் அடங்கிய குழுக்கள் வீட்டுக் குத் திரும்பிய நோயாளிகளைக் கண்காணிப்பார்கள். நோயாளிக ளும் பராமரிப்பு சேவை வழங்கு பவர்களும் உடல்நிலை குறித்து சற்று அதிகமான நம்பிக்கை கொண்டவுடன் நோயாளிகள் சமூ கப் பராமரிப்பு அமைப்புகளுக்கு மேலும் ஆதரவு பெற பரிந்துரைக் கப்படுவார்கள்.

மூன்று நாட்கள் நடக்கும் ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அனைத்துலக மாநாட்டின் தொடக்க விழாவில் நிகழ்ச்சிகள் படைத்த தாதிமை இல்லத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களிடம் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கலந்துரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்