சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த இரண்டாவது சமூக மையம் பிடோக்கில் நேற்று திறக்கப்பட்டது. விளையாட்டு நிலையம், பொது நூலகம், சமூக மனமகிழ் மன்றம், பலதுறை மருந்தகம், மூத்தோர் பராமரிப்பு நிலையம் எல்லாம் அங்கு ஒரே கூரையின்கீழ் அமைந்திருக்கின்றன. Heartbeat@Bedok எனப்படும் அந்தச் சமூக மையம், மூன்று காற்பந்துத் திடல் பரப்புள்ள இடத் தில் கட்டப்பட்டு இருக்கிறது. அதில் 30க்கும் அதிக சில் லறை வர்த்தகக் கடைகள் இருக் கின்றன. உணவுக் கடைகளும் உண்டு. பிடோக் நகரம் உருவாக் கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் அதிக காலம் ஆகிறது. இந்தக் காலகட்டத்தில் அந்த நகர குடி யிருப்பாளர்களின் வாழ்க்கைப் பாணியும் தேவைகளும் மாறியிருக் கின்றன.
சீனப் புத்தாண்டு சமய நல்லிணக்க விருந்து வில்சன் சைலஸ் ஆதரவற்ற மூத்தோருக்குச் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு, தாய் தந்தைக்குச் சேவை செய்த திருப்தியைத் திருமதி அம்பிகா வுக்கு அளித்தது. சவுத் பிரிட்ஜ் சாலையின் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் நேற்று முன் தினம் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூத்தோருக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார், 54 வயது திருமதி அம்பிகா கமல நாதன். திருமதி அம்பிகாவைப் போன்று ஸ்ரீ மாரியம்மன் ஆலயத் தின் தொண்டூழியர்கள் பதினைந் தாவது முறையாக ஏற்பாடு செய் யப்பட்ட சீனப் புத்தாண்டு விருந் தில் மூத்தோருடன் அளவளாவி உற்சாகமடைந்ததுடன் அன்பளிப் புப் பைகளுக்கான பொருட்களை நன்கொடையாக வழங்கினர். தெம்புசு, கிரேத்தா ஆயர் போன்ற ஆதரவற்றோர் இல்லங் களைச் சேர்ந்த சுமார் 120 மூத்தோரைக் கலை நிகழ்ச்சிகள் மகிழ்வித்ததுடன் அவர்களுக் கென பிரத்தியேகமாகத் தயாரிக் கப்பட்ட உணவு வகைகளும் பரிமாறப்பட்டன.
பிரதமர் லீ சியன் லூங் Heartbeat@Bedok மையத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

