அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் புகை; மூச்சுவிட சிரமப்பட்ட பயணிகள்

அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் புகை; மூச்சுவிட சிரமப்பட்ட பயணிகள்

2 mins read
a17c4e52-c237-40ea-b787-6b3c5fe6e076
-

அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் மின்படிக்கட்டு ஒன்றிலிருந்து புகை எழுந்ததை அடுத்து அந்த எம்ஆர்டி நிலையத்தில் நேற்று பிற்பகல் தடுப்பு வேலி போடப்பட்டிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பின், பழுதான மின்படிக்கட்டில் நேற்று மாற்றப்பட்ட மோட்டார் பாகங்களால் புகை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவன தொடர்பு துணைத் தலைவர் மார்கரெட் டியோ தெரிவித்தார். அதிக சூடானதால் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் சம்பவ இடத்தில் போலிசாரும் தீயணைப்பாளர்களும் காணப்பட்ட புகைப்படங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பயணிகளுக்கு வழிகாட்டியதும் தெரிந்தது.

அங் மோ கியோ ஹப்புக்கு செல்லும் நடைபாதைக்கு இட்டுச் செல்லும் மின்படிக்கட்டில் புகை சூழ்ந்து இருந்ததாகவும் மின்தூக்கியும் வேலை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். கடுமையான நெடி வீசியதாகவும் அதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பயணிகளின் பாதுகாப்புக்காக மின்படிக்கட்டும் இணைப்புப் பாதையும் மூடப்பட்டதாகச் சொன்னார். இருப்பினும் வடக்கு- தெற்கு தடத்தில் ரயில் சேவையில் பாதிப்பு இல்லை. சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த 15 வயது மாணவர், நிலையத்தில் இருந்து மிகவும் கடுமையான ரப்பர் நாற்றம் வந்ததாகவும் பலர் மூக்கு, வாயை மூடியபடி நிலையத்திலிருந்து வெளியேறினர் என்றார். எஸ்எம்ஆர்டி நிறுவன ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் அவசர வாகனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். இணைப்புப் பாதை நேற்று மாலை 6.10க்கு திறக்கப்பட்டது.

அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் புகையைக் காட்டும் புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. படம்: ஜாஸ் சுவா சுவாட் பிங்கின் ஃபேஸ்புக் பக்கம்