சிங்கப்பூர் விமானக் கண்காட்சி யில் பங்குபெற்ற ஒருவர் இயக்கும் விமானம் விபத்துக்குள்ளானது. பறப்பதற்கு ஆயத்தமாகி ஓடு பாதையில் சென்றுகொண்டிருந்த போது நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அந்த விபத்து நடந்தது. விமானத்தில் தீ பற்றிக் கொண்டதையடுத்து விமான நிலைய அவசர சேவையின் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், சம்பவத்தால் போக்குவரத்து அந்த இடத்தில் பாதிக்கப்பட்டது. சாங்கி விமான நிலையத்தின் இரு ஓடுபாதைகளில் ஒன்று சுமார் ஆறு மணி நேரத்திற்கு மூடப்பட்டது. அதனால் விமான சேவைகள் பல தாமதமடைந்த துடன் நூற்றுக்கணக்கான பயணிகள் சம்பவத்தால் பாதிக்கப் பட்டனர். தென்கொரியாவின் 'தி பிளாக் ஈகல்ஸ்' அணியின் அந்த விமானத்தின் சக்கரம் வெடித்த தால் புல்வெளியில் சறுக்கி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தென்கொரியாவின் சாகச விமானம் சாங்கி விமான நிலையத்தில் புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியது. தீப் பற்றிய விமானத்திலிருந்த விமானி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

