தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானப்படை பொன்விழா கொண்டாட்டம் தொடக்கம்

1 mins read
07dab7be-d6b8-49e8-a71c-7abd92daef83
-

சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கின. சாங்கி உயரே மூன்று F-15SG போர் விமானங்கள் எடுப்பாக பறந்துசென்றன. சிங்கப்பூர் விமா னக்காட்சி நிகழ்ச்சியில் அந்தத் தொடக்க நிகழ்ச்சி இடம்பெற்றது. சிங்கப்பூர் குடியரசு விமானப் படையின் போர் விமானங்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் வேறொரு F-15SG ரக விமானம் நேற்றைய நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்தப் புதிய விமானம், விமானப்படையின் சின்னத்துடன் நீலம், வெள்ளை நிறத்தில் இருந் தது. 50 என்ற எண்ணுடன் இருந்த அந்தச் சின்னம், சிங்கப் பூரர்களின் தொடர் ஆதரவுடன், சிங்கப்பூர் குடியரசு விமானப்படை முன்னேறிச்செல்வதற்கு அளவே இல்லை என்பதைப் பறைசாற்றி யது. அதிபர் ஹலிமா யாக்கோப்பும் மூத்த ராணுவ அதிகாரிகளும் ஆகாய அணிவகுப்பைப் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர், ராணுவம், கடற்படை யுடன் சேர்ந்து சிங்கப்பூரின் விமா னப்படை நாட்டின் சுயாதிபத்திய உரிமையைப் பாதுகாத்திருப்பதாக தமது உரையில் குறிப்பிட்டார்.

அதிபர் ஹலிமா யாக்கோப், நேற்று சிங்கப்பூர் குடியரசு விமானப்படையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்தார். 50வது ஆண்டு விழாவைக் கருப்பொருளாகக் கொண்ட F-15SG விமானத்தை அவர் அறிமுகப்படுத்தினார். சாகசக் காட்சிகளையும் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்