மூத்தோருக்குப் பிரதமர் லீ அன்பளிப்பு

1 mins read
d6a601e8-d1b8-4f1b-b245-6e3ed957efac
-

பிரதமர் லீ சியன் லூங், அங் மோ கியோ வட்டார டெக் கீ பகுதியைச் சேர்ந்த 480 மூத்தோருக்கு $150 ரொக்கம், $50 மதிப் புள்ள ஷெங் சியோங் பற்றுச்சீட்டுகள் ஆகியவை அடங்கிய அன்பளிப்பு உறைகளை நேற்று வழங்கினார். (படம்) அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப் பினருமான அவர், டெக் கீ தொடக்கப்பள்ளி யில் நடந்த இந்த அன்பளிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அங்கு 409வது புளோக்கில் இருக்கும் சந்தை மற்றும் உணவு நிலையத்திற்குச் சென் றார். அங்கு குடியிருப்பாளருடன் கலந்துரை யாடிய பிரதமர், அன்பளிப்பு உறைகளைப் பலருக்கும் வழங்கினார்.