நிலப் போக்குவரத்தில் புத்தாக்கம்; $25 மி. திட்டம்

நிலப் போக்குவரத்தில் புத்தாக்கம்; $25 மி. திட்டம்

1 mins read
a625bd44-f56a-426f-8498-2eb038efffa3
-
Google News Preferred Icon

நிலப் போக்குவரத்து துறையில் நடமாட்டம் சார்ந்த ஆய்வுகளையும் முன்னோட்டச் சோதனைகளையும் ஊக்குவிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் அடுத்த ஐந்தாண்டு களில் $25 மில்லியன் ஒதுக்கு கிறது. இதனால் 2030ஆம் ஆண்டுக்குள் 8,000 புதிய வேலைகள் உருவாகக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலப் போக்குவரத்து புத்தாக்க நிதி, நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்டி கைனடிக்ஸ் போன்ற உள்ளூர் தொழில்துறை பங்காளிகளும் கூட்டாக மேற்கொள்ளும் திட்டப் பணி களையும் உள்ளடக்கும் என போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார்.

அரசாங்கத்தைச் சார்ந்த எஸ்டி கைனடிக்ஸ் நிறுவனம், ரயில் நிறுத் துமிடங்களுக்கான தானி யக்க இயந்திர மனித நடமாட்டச் சாதனங் களையும், ரயில் சேவை பயிற்சி, பராமரிப்பு, பரிசோதனை ஆகியவற்றுக்கான மெய்நிகர் சாதனங்களையும் உருவாக்கி வருவதாக அவர் விவரித்தார்.