'பன்முனை கலாசாரம் வலுப்பட வேண்டும்'

'பன்முனை கலாசாரம் வலுப்பட வேண்டும்'

1 mins read
519af950-4ae4-444a-a4b1-435a42c97759
-
Google News Preferred Icon

ஆயர் ராஜாவில் இருந்த தமது குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டை ஜப்பானிய வீரர்கள் சோதனையிட்டபோது திரு சியா சிவ் சூக்கு வயது 11. 1942 பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இதற்கு மறுநாளே ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்தது. தற்போது 87 வயதாகும் திரு சியா, 11வது வயதில் பல முறை துப்பாக்கியில் பொருத்தப் பட்ட முனையால் பலமுறை குத்தப் பட்டு மற்றவர்களுடன் புதைக்கப் பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய சியா புதை குழியிலிருந்து தோண்டி வெளியே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப் பினார். திரு சியாவுக்கு துப்பாக்கி முனை கத்தியால் குத்தப்பட்ட தழும்புகள் இன்னமும் மறைய வில்லை. முழுமைத் தற்காப்பு தின முமான நேற்று ஜப்பானிடம் சிங்கப் பூர் வீழ்ந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜப்பானிய ஆக்கிரமிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் திரு சியாவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

ஆனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் திரு சியா இதில் பங்கேற்கவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் 51வது போர் நினைவு தினமான நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்