சொத்துச் சந்தை பங்குகள் சரிவு; வரி உயர்வின் தாக்கம்

சொத்துச் சந்தை பங்குகள் சரிவு; வரி உயர்வின் தாக்கம்

1 mins read
91b2e86e-4e95-4921-909d-a1da07c0d9da
-

சிங்கப்பூர் சொத்துச் சந்தை பங்கு கள் நேற்று சரிவு கண்டன. $1 மில்லியனுக்கும் மேலான மதிப் புள்ள குடியிருப்பு சொத்துகளை வாங்குவோருக்கான முத்திரை வரியை அரசாங்கம் நேற்று முதல் உயர்த்தியதே அதற்குக் காரணம். நான்கு ஆண்டுகளாக மந்த மாக இருந்த குடியிருப்புச் சந்தை சற்று தலை தூக்கிவருவதாக இருந்த நிலையில் மீண்டும் இறக்கம் கண்டுள்ளது. 'யுஒஎல்' குழுமமும் 'சிட்டி டிவலெப்மெண்ட்ஸ்' பங்குகளும் ஆக அதிகமாக 2 விழுக்காட்டுக் கும் மேலாக நேற்று சரிந்தன. சிங்கப்பூரின் மிகப் பெரிய மேம் பாட்டாளரான 'கேபிடல்லேண்ட்' பங்குகள் இந்த வாரத்தில் முதல் முறையாக சரிந்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின் கடந்த இரு காலாண்டுகளில் வீட்டு விற்பனை விலை ஏற்றம் கண்டதை அடுத்து, நேற்று முன் தினம் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முத்திரை வரி உயர்வு இத்தகைய சரிவை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளாக மந்தமாக இருந்த சொத்துச் சந்தை மீண்டும் கடந்த இரு காலாண்டுகளாக தலைதூக்கிய நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து வாங்குவோருக்கான முத்திரை வரி உயர்வு, சொத்துச் சந்தைப் பங்குகளை சரிய வைத்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்