மலேசிய 'போத்தா சிவா' கும்பல் முறியடிப்பு

1 mins read
a59d3ee9-2191-4d26-a3ff-b188c970cc56
-

மலேசியாவில் லாரி பாகங்களைத் திருடி சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யும் 'போத்தா சிவா' என்று அழைக்கப்படும் மோசடிக் கும் பலை அந்நாட்டின் போலிசார் முறி யடித்துள்ளனர். இதில் பங்ளாதேஷ், எகிப்து நாட்டவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் மற்றும் அனைத் துலகப் போலிசார் உதவியுடன் கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மில்லியன் ரிங்கிட் மதிப் புள்ள (S$675.830) ஏராளமான லாரி பாகங்களையும் மலேசிய போலிசார் மீட்டுள்ளனர்.

'போத்தா சிவா' கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகள் பற்றி விளக்கிய சிலாங் கூர் போலிஸ் தலைவர் மஸ்லான் மன்சூர், "கடந்த ஜனவரி 23ஆம் தேதி பங்ளாதேஷ் நாட்டவரையும் மற்றொருவரையும் கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறை அதி காரிகள் கைது செய்தனர்," என்றார். "திருடப்பட்ட லாரிகளிலிருந்து பாகங்களைப் பிரித்துக்கொண் டிருந்தபோது இருவரும் பிடிபட் டனர்.

மலேசிய போலிசார் பறிமுதல் செய்துள்ள லாரி பாகங்கள். திருடப்பட்ட லாரிகளில் இருந்து இந்த இயந்திரங்கள் பிரித்து எடுக்கப் பட்டுள்ளன. படம்: த ஸ்டார்/ ஏசியா நியூஸ்