வங்கிச் சேவைகள், பணம் அனுப்புதல் போன்ற பல்வேறு சேவைகளில் வெளி நாட்டு ஊழியர்கள் அனுகூலங்களைப் பெற உறுப்பியத் திட்டம் ஒன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் இந்தப் புதிய திட்டம் குறித்து நேற்று அறிவித்தார். இந்தத் திட்டத்தை வெளிநாட்டு ஊழியர்கள் மையமும் பிஓஎஸ்பி வங்கியும் இணைந்து நடத்துகின்றன. இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் கைபேசிக் கட்டணம், சைக்கிள் பகிர்வு போன்ற அன்றாட செலவுகளில் பணத்தை மிச்சப்படுத்தலாம். வெளிநாட்டு ஊழியர்களுக்கு இம்மாதிரியான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.
வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 'ஒர்க் பர்மிட்' எனப்படும் வேலை அனுமதி சீட்டுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் ஊழி யர்கள், அவர்களது முதலாளிகள் அவர்களுக்கான பிஓஎஸ்பி வங்கியில் கணக்கு திறக்கும் பட்சத்தில் ஏடிஎம் அட்டையைப் பெறுவர். அந்த ஏடிஎம் அட்டை புதிய திட்டத்தின் உறுப்பிய அட்டையாகவும் செயல்படும். ஏற்கெனவே வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள், பிஓஎஸ்பி வங்கி கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில் இவ்வாண்டின் நான்காவது காலாண் டுக்குள் 'பிஓஎஸ்பி ஜோலி' செயலி மூலம் புதிய திட்டத்தின் உறுப்பினர் களாகச் சேர்ந்துகொள்ளலாம். அவர் களுக்கு மின்னிலக்க உறுப்பிய அட்டை வழங்கப்படும்.
பல்வேறு இடங்களில் கூடாரங்கள் அமைத்துப் புதிய உறுப்பியத் திட்டம் பற்றி வெளிநாட்டு ஊழியர்களுக்கு விளக்கி, சேர ஊக்குவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மையம். படம்: வெளிநாட்டு ஊழியர்கள் மையம்

