அடித்தள அமைப்புகளின் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் சமூகத்திற்கு ஆற்றும் தொண்டுகளுக்கு நன்றி கூறும் வகையில் ஆண்டுதோறும் பிரதமரும் அமைச்சர்களும் இஸ்தானாவில் சீனப் புத்தாண்டு விருந்து அளித்துச் சிறப்பிப்பது வழக்கம். அந்த வழக்கத்தையொட்டி நேற்று இஸ்தானாவில் நடந்த விருந்தில் சுமார் 4,000 பேர் கலந்துகொண்டனர். அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவருடைய கணவரும் அதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல்வேறு நடவடிக்கைகளில் விருந்தினர்கள் ஈடுபடும் வகையில் பல கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. டெங் யுவான் சீனப் பலகாரம் செய்தல் அவற்றுள் ஒன்று. அதிபர் ஹலிமா அந்தப் பலகாரத்தைச் செய்து பார்த்தார். சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டமாக இருந்தாலும் பல இனக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
இஸ்தானா விருந்தில் 4,000 பேர் பங்கேற்பு
1 mins read
-

