'குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்'

'குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்'

1 mins read
e5a7e1d6-11bf-47a9-aa84-3359e43195ae
-

ஒரு காலத்தில் இந்தி திரையுலகின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி தற்செயலாக குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்தார் என்று பிரேதப் பரி சோதனை அறிக்கை தெரிவித்து இருக்கிறது. அவரது ரத்த மாதிரியில் மது கலந்திருந்தது சோதனையில் தெரியவந்ததாகவும் அதனால் நிலை தடுமாறி அவர் நீர் நிறைந்த குளி யல் தொட்டிக்குள் விழுந்திருக்க லாம் என்றும் சொல்லப்படுகிறது. உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தபோது இந்த எதிர்பாரா துயரம் நிகழ்ந்தது.

முன்னதாக அவர் மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகின. குளியலறைக்குச் சென்று வெகு நேரமாகியும் ஸ்ரீதேவி வெளியில் வராததால் அங்கு சென்று பார்த்த அவரது கணவர் போனி கபூர், அவர் சுயநினைவின்றி குளியல் தொட்டியில் கிடந்தததைக் கண்டு அதிர்ந்துபோனார். தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி யின் உடல் நேற்றிரவு மும்பைக்குக் கொண்டு செல்லப்படவிருந்தது. அங்குள்ள பவன் ஹன்ஸ் தகனச் சாலையில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று 'ஏஎன்ஐ' செய்தி கூறியது. ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இந்தி திரையுல கினர் அவரது வீட்டில் கூடியிருந் தனர். நடிகர் ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் நேற்று மும்பை புறப் பட்டுச் சென்றனர்.