மேலும் 27 மேம்பாலங்களில் மின்தூக்கிகள் பொருத்தப்படும்

மேலும் 27 மேம்பாலங்களில் மின்தூக்கிகள் பொருத்தப்படும்

1 mins read
700cd291-d24a-421a-a06d-1b29bf7f770b
-

முதியோரும் உடற்குறையுள்ளோ ரும் மேம்பாலங்களை வசதியாகப் பயன்படுத்த மேலும் 27 மேம்பாலங் களில் மின்தூக்கிகள் பொருத்தப் படவுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் அதற்கான வேலை கள் முடிவுபெறும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறி யுள்ளது. இந்தத் திட்டத்திற்கான இரு ஏலக் குத்தகைகளை கடந்த டிசம்பர் மாதம் ஆணையம் வழங்கி யது. முதல் கட்டமாக சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் வழங்கப்படும் இடங்களுக்கு அருகிலுள்ள மூன்று மேம்பாலங்களில் மின் தூக்கிகள் பொருத்தப்பட்டு மேம் பாட்டுப் பணிகள் நடைபெறும். தேசிய பல்கலைக்கழக மருத்து வமனை அருகிலுள்ள ஆயர் ராஜா விரைவுச்சாலை, அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அருகிலுள்ள அலெக்சாண்ட்ரா சாலை, கேலாங் பலதுறை மருந்தகத்திற்கு அருகி லுள்ள தீவு விரைவுச்சாலையிலும் அந்த மூன்று மேம்பாலங்கள் பொருத்தப்படவுள்ளன.

மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மூன்று மேம்பாலங்களில் முதல் கட்டமாக மின்தூக்கிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்