தண்ணீரைச் சேமிக்க உறுதி

1 mins read
5ab8bed3-88e9-4d5c-a71f-1a9a4d745d24
-

தண்ணீர் சேமிப்பிற்கும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் தங் களின் பங்கை ஆற்ற 30 அமைப்பு களையும் கல்வி நிறுவனங்களை யும் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நேற்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக இல்லங்களில் கடைப்பிடிக்கக்கூடிய ஐந்து பழக்க வழக்கங்களைப் பின்பற்ற உறுதி பூண்டனர். குறைவான குளியல் நேரம், முடிந்தவரை கழிவறையில் அரை அளவு தண்ணீர் பயன்பாடு, காய்கறிகளையும் பாத்திரங்களை யும் ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து கழுவுவது, பல்துலக்கும் போது குவளையைப் பயன்படுத்து வது, முழு அளவில் மட்டும் துணி துவைப்பது ஆகியவை அந்த ஐந்து பழக்கவழக்கங்கள். மரினா அணைக்கட்டில் நேற்று நடந்த சிங்கப்பூர் உலக தண்ணீர் தினக் கொண்டாட்டங்களில் அவர்கள் கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் பொதுப் பயனீட் டுக் கழகம் இந்த கொண்டாட்டங்க ளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

மரினா அணைக்கட்டில் நேற்று நடந்த கொண்டாட்டங்களின் தொடக்கவிழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்