தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் ஓங்: மூத்தோர் துடிப்புடன் திகழ நடவடிக்கை மையங்கள் உதவுகின்றன

1 mins read
2180e64c-3e5c-4ce7-8c21-980aeafc9b10
-

சிங்கப்பூர் மக்கள்தொகை மூப் படைந்து வரும் நிலையில் மெடி‌ஷீல்டு லைஃப், எல்டர்‌ஷீல்டு போன்ற திட்டங்கள் மூத்தோருக்கு அதிக அளவில் உதவ முடியும் என்று கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்துள்ளார். மேலும், மூத்தோர் தங்களது உடல்நலனை நல்ல முறையில் வைத்துக்கொள்ள துடிப்புடன் அவர்கள் திகழ்வது அவசியம் என்றும் இந்த அம்சத்தில் மூத் தோர் நடவடிக்கை நிலையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங், யீ‌ஷூன் ரிவர்வாக்கில் உள்ள பிஏசி எனப்படும் பசிபிக் நடவடிக்கை நிலையத்தில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடு முழுவதும் ஒவ்வொரு மட்டத்திலும் அனு சரணை தேவைப்படுவதாகக் கூறினார். "அதிகமான சுகாதாரப் பரா மரிப்புத் தேவையுள்ள மூத்த மக்கள்தொகைக்கு ஏற்றவாறு நமது நிதி நிலைமையை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது," என்றார் அவர். "மெடி‌ஷீல்டு லைஃப், எல்டர் ‌ஷீல்டு என காப்பீட்டுத் திட்டத்தில் சில சரிக்கட்டல்களைச் செய்தோம். இப்போது அடுத்த பத்தாண்டில் பொருள் சேவை வரியை உயர்த்து வது தொடர்பான பெரியதொரு நிதி நிலவர மாற்றத்தில் ஈடு பட்டுள்ளோம்.

மூத்தோர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியை அமைச்சர் ஓங் யி காங் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்