செயல்முறை அனுபவம் மூலம் சிறுவர்கள் கல்வி கற்க உதவும் திட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2023ஆம் ஆண் டுக்குள் விரிவுபடுத்தப்படும். 80க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளிலும் அனைத்து உயர் நிலைப்பள்ளிகளிலும் தற்போது அந்தச் செயல்முறை கற்றல் திட் டம் நடப்பில் உள்ளது. கருத்துகளை ஆராயவும் புதிய திறன்களை வளர்ப்பதற்கும் படைப் புத்திறனை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்று கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியான கற்றலின் அவ சியம் பற்றி வலியுறுத்திய அவர், செயல்முறை கற்றல் என்பது தொழில்முறை மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற மனப்போக்கை நிராகரித்தார். வகுப்பறையில் கற்கும் பாடங் களை புரிந்துகொள்வதற்கு பய னுள்ள ஒரு வழி என்பதை அவர் நினைவுகூர்ந்தார். புதிய அறிவியல் மையத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய் யும் என்று திரு இங் கூறினார். 2020ஆம் ஆண்டு மத்தியில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற உடன் செயல்முறை கற்றல் அனுப வத்திற்கு அந்த மையம் முக்கிய பங்கு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
குவீன்ஸ்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கருவியை சோதித்துப் பார்க்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

