மின்னிலக்கப் பொருளியலில் கால்பதிக்க முயன்றுவரும் சிங்கப்பூர், அதன் முதல் இணையப் பாதுகாப்பு நிறுவனத் துவக்க மையத்தை திறக்கவிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கு இம்மையம் நிதி வழங்கும். 'புளோக் 71ல் புத்தாக்க இணையப் பாதுகாப்பு சூழல்' என்றழைக்கப்படும் புதிய மையம், இணையப் பாதுகாப்பு தொழில் முனைவர்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும். ஆயர் ராஜா கிரசெண்ட்டில் 'புளோக் 71' எனப் பிரியமாகவும் கூட்டாகவும் அழைக்கப்படும் தொழில்துறைக் கட்டடக் குழு மத்தில் மையம் அமைந்திருக்கும். இப்பகுதியில் தற்போது ஏறத்தாழ 700 தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன.
ஆர்வமுள்ள தொழில் முனை வர்களின் தொழில் யோசனைகள் சாத்தியமானதாக இருப்பதையும் யோசனைகளை அடுத்த கட்டத் திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியும் தொழில் அறிவும் அவர்களுக்கு இருப் பதையும் உறுதிப்படுத்துவது மையத்தின் நோக்கம். வெளிநாட்டுச் சந்தைகளில் விரிவடையவும் 'வென்ச்சர்' நிதி பெறவும் உதவி அளிக்கப்படும். தகவல்தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையமும் சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பும் சிங்டெல், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து மையத்தைத் தொடங்கு கின்றன.
சிங்டெல்லின் 'இன் னோவ்8' நிறுவனப் பிரிவும் என்யுஎஸ் என்டர்பிரைசும் புளோக் 71ல் தற்போது அமைந்துள்ள இடத்தில் அமைந்திருக்கும். அடுத்த ஈராண்டுகளில் 100 தொழில்முனைவர்களையும் 40 புதிய நிறுவனங்களையும் உருவாக்க மையம் முயற்சி எடுக்கும். நேற்று நடைபெற்ற தொடர்பு, தகவல் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத் தின்போது தொடர்புத் தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் இவ்விவரத்தை அறிவித்தார்.

