விமானம் விழுந்து நொறுங்கி குறைந்தது 50 பேர் மரணம்

விமானம் விழுந்து நொறுங்கி குறைந்தது 50 பேர் மரணம்

1 mins read
e1143206-7ee2-47ca-99b6-3b953ece4088
-

நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 38 பேர் உயிரிழந் தனர். பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து நேற்று பிற்பகலில் கிளம்பிய யுஎஸ்-=பங்ளா ஏர்லைன்சுக்குச் சொந்தமான அந்த விமா னத்தில் 67 பயணிகள் உட்பட மொத்தம் 71 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் உள்ள காற்பந்துத் திடலில் விழுந்து நொறுங்கி தீப் பிடித்த அந்த விமானத்தில் இருந்து கரும் புகை கிளம்பியதைப் படங்கள் காட்டின. "விமானத்தில் இருந்து இதுவரை ஐம்பது சடலங்களை மீட்டுள்ளோம்," என்று ராணுவப் பேச்சாளர் கோகுல் பண்டாரி தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்தோரில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத் துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக திரு பண்டாரி குறிப்பிட்டார். அதே நேரத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒன்பது பேரின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.

விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு ஓடி, விமானம் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாக காட்மாண்டு விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் குமார் சேத்ரி தெரிவித்தார். படம்: ராய்ட்டர்ஸ்