லிட்டில் இந்தியா நகைக்கடை சம்பவம்: மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
4aba808a-a70d-48c3-bb8c-f1bf46d4afa7
-

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றினுள் அத்துமீறி நுழைய முயன்றதாக மூன்று பதின்ம வயதினர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. சதீஷ் கௌதம், 19, ஜமால் அப் துல் கனி, 19, முகம்மது ஃபாரிஸ் முகம்மது ஃபாட்ஸிர், 17 ஆகியோரே குற்றம்சாட்டப்பட்டவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதி காலை 4.30 மணியளவில் பஃப்ளோ ரோட்டில் உள்ள ஜுவல் பேலஸ் நகைக்கடையில் அவர்கள் அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாகத் தெரி விக்கப்பட்டது. நவீன உலோக வெட்டுக் கருவியைப் பயன்படுத்தி கடையின் இரும்புக் கதவையும் பூட்டையும் உடைத்து அத்துமீறி கடைக்குள் நுழைய முயற்சி செய்யும் குற்றத்தை அம்மூவரும் புரிந்ததாகத் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடையின் உருட்டுக் கதவு நெருப்பால் சுடப்பட்ட தடயத்துடன் சேதமடைந்திருந்ததாக காலை 5.20 மணியளவில் தங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது. உலோகங்களைப் பற்றவைக்க வும் அகற்றவும் பயன்படுத்தப்படும் 'அசித்திலீன்' நிரப்பப்பட்ட குப்பி கள், சிறிய டார்ச் விளக்கு, கையு றைகள், தொப்பி, முகத்திரை ஆகி யவற்றுடன் அத்துமீறி நுழைவ தற்குப் பயன்படுத்தப்படும் இதர பொருட்களையும் சம்பவ இடத்தி லிருந்து போலிசார் கைப்பற்றினர்.

சந்தேக நபர்கள் கடையின் இரும்புக் கதவை உடைக்க முயற்சி செய்தது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி இருந்தது. படம்: சின் மின்