இன்றைய சூழலில் சுய தீவிரவாதச் சிந்தனைகளை வளர்த்துக் கொள் வோர் 'அதிக சிக்கலான மனோ வியல், சமூகப் பிரச்சினைகளை' எதிர்நோக்குகின்றனர். இவர்களை நல்வழிப்படுத்துவதற்கான சரி யான வழிமுறைகளை உருவாக்க சிங்கப்பூர் இன்னமும் முயன்று வருவதாக உள்துறை அமைச்சர் திரு கா. சண்முகம் நேற்று கூறி னார். கடந்த 2007 முதல் கைதான இத்தகையோரில் இதுவரை வெறும் 25 விழுக்காட்டினரே விடு தலை செய்யப்பட்டுள்ளனர். மீதி பேர் இன்னமும் தடுப்புக்காவலில் இருப்பதாக சட்ட அமைச்சருமான திரு சண்முகம் கூறினார்.
இணையத்தில் வெளியிடப்படும் செய்திகளைப் படித்தும், ஐஎஸ் ஐஎஸ் போராளிகள் பரப்பும் சித் தாந்தக் கொள்கையால் கவரப்பட் டும் சுய தீவிரவாதச் சிந்தனை களை வளர்த்துக்கொள்ளும் தனி நபர்கள், 2001ம் ஆண்டின் செப் டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இங்கு கைதான ஜமா இஸ்லாமியா தீவிரவாதக் குழு உறுப்பினர்களிலி ருந்து மாறுபட்டவர்கள். சுய தீவிரவாதச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வோரை நல் வழிப்படுத்துவது அதிக சிரமமாக இருப்பதாகத் திரு சண்முகம் கூறினார். "அவர்கள் தங்களது நம்பிக் கையில் விடாப்பிடியாக இருக்கி றார்கள். இஸ்லாத்தைப் பற்றி மிகக் குறைவான புரிந்துணர்வே கொண்டுள்ள அவர்கள், இணை யத்தில் பார்ப்பவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு, அதன்படி செயல்படுகிறார்கள்," என்றார் அவர்.
சமய மறுவாழ்வுக் குழுவின் வருடாந்திர ஓய்வுகூட்டத்தில் பங்கேற்ற சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (இடது) சிரியாவின் இஸ்லாமிய அறிஞர் ஷேக் சயீது முகம்மது அல்-யாக்கோபியுடன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

