இணையப் பாதுகாப்பு: ஆசியான்-ஆஸ்திரேலியா சேர்ந்து செயல்படவேண்டும்

இணையப் பாதுகாப்பு: ஆசியான்-ஆஸ்திரேலியா சேர்ந்து செயல்படவேண்டும்

1 mins read
eae7b6f4-1b08-4478-a5dd-86518a1161f4
-

இணையப் பாதுகாப்பு அம்சங் களில் ஆசியானும் ஆஸ்திரேலி யாவும் ஒன்றாகச் சேர்ந்து அணுக்கமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக் கிறார். இணையப் பாதுகாப்பு விவகாரங்களில் இணையக் குற்றச்செயல்கள் முதல் போலி யான செய்திகள் வரை பலவும் உள்ளடங்கும் என்றார் அவர். ஆசியான்=ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டை யொட்டி நடந்த குழு விவாதிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசியான் தலைவர்கள், ஆஸ் திரேலிய பிரதமர் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் லீ உரையாற்றினார்.

இணையக் குற்றச்செயல்கள் எல்லை கடந்து இடம்பெறும் பிரச்சினையாக இருக்கின்றன. அவை போலிசுக்கு மிகவும் சிரமமானவையாகவும் உள்ளன என்பதைத் திரு லீ சுட்டினார். "அத்தகைய குற்றச்செயல் கள் நம் மக்களிடத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சமூகப் பிணைப்பைப் பலப்படுத்தும் நம்பிக்கையைப் போலி செய்திகள் கீழறுத்து விடும்," என்று பிரதமர் லீ எச்ச ரித்தார்.