சட்டங்களில் இடைவெளி நிரப்பப்பட வேண்டும்

சட்டங்களில் இடைவெளி நிரப்பப்பட வேண்டும்

1 mins read
eed9ed7c-4e6b-426d-9694-9900397ce9e5
-

வெளிநாட்டில் நிகழும் பயங்கர வாதத் தாக்குதல்களை ஆழ்ந்து கவனிக்கும்போது சிங்கப்பூர் சட் டங்களிலும் இடைவெளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் பொது ஒழுங்குமுறை இல்லாதபோது அதை எதிர்கொள்ள போலிஸ் படைக்கு சிறப்பு அதிகாரங்கள் இல்லாததும் தெரிய வந்து உள்ளது என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். 2013 பாஸ்டன் மாரத்தான் வெடிகுண்டுச் சம்பவத்தை மேற் கோள் காட்டிப் பேசிய திருவாட்டி டியோ, அந்தப் பயங்கரவாதியைத் தேடும் பணி போல் சிங்கப்பூரில் நிகழ்ந்திருந்தால் பொது ஒழுங்கு சீர்குலைவைத் தடுப்பதற்காக ஊர டங்குச் சட்டத்தைப் பயன்படுத்த போலிசுக்கு சிறப்பு அதிகாரம் இருந்திருக்காது என்றார்.

தற்போதைய சட்டங்கள் பயங் கரவாதத் தாக்குதலின்போது நடைமுறைப்படுத்த போலிசுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்க வில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டிப் பேசினார். இந்தப் புதிய உத்தேச சட் டங்களினால் அமைச்சரின் நட வடிக்கை ஆணை வந்த பிறகு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க போலிஸ் ஆணையாளருக்கு அதி காரங்கள் இருக்கும்.

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பாவனைப் பயிற்சி. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்