ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் ஒரு ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட் டியிலிருந்து நிறமற்ற ஒரு வகை வாயு வெளியானதையடுத்து அந்த ரயில் வண்டி சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு நிகழ்ந்தது. ரயிலின் குளிர் சாதனப் பெட்டியில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித் தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரயில் வண்டி சேவையிலிருந்து மீட் டுக்கொள்ளப்பட்டது. அதில் மேலும் பல சோதனைகள் நடத்தப்படும் என்று எஸ்எம் ஆர்டி பேச்சாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பயணிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எம்ஆர்டி ரயில் வண்டி குளிர்சாதனத்திலிருந்து வாயு வெளியாகி இருக்கும் மூன்றாவது சம்பவம் இது. சென்ற ஆண்டு மே மாதத்திலும் 2016 ஆகஸ்ட்டிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தன. குளிர்சாதனங்களில் நிறமற்ற, வாடை யற்ற, தீப்பிடிக்காத, அவ்வளவாக நச்சுத் தன்மை இல்லாத ஒரு வகை வாயு பயன் படுத்தப்படுவதாக தெரிகிறது.

