இயல், இசை, நாடகத்துடன் தமிழ்மொழி விழா

இயல், இசை, நாடகத்துடன் தமிழ்மொழி விழா

1 mins read
5afacebe-c129-4ec8-adaa-6138f66701cc
-

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாக நிலைக்கச் செய்யவும் அம்மொழியின் புழக் கத்தை ஊக்குவிக்கவும் தமிழ் மொழி விழா அடுத்த மாதம் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளது. இவ்வாண்டு விழாவின் புதிய அம்சமாக இயல், இசை, நாடகம் ஆகியவற்றுடன் தமிழ்மொழி இணைந்து செயல்பட வேண்டும் எனும் நோக்கத்தில் நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாகக் கூறினார் தமிழ்மொழி விழாவை வழிநடத்தும் வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் நசீர் கனி.

இந்திய மரபுடைமை நிலையம், தேசிய நூலக வாரியம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு உள்ளிட்ட பல அமைப்புகளுடன் சேர்ந்து கலை, நாடகம், நடனம் தொடர்பிலான நிகழ்ச்சிகளைப் படைப்பதன் மூலம் மக்களிடம் தமிழ்மொழியைக் கொண்டு சேர்க்கலாம் என்று அவர் எடுத்துரைத்தார். "தமிழ்மொழி விழா நடைபெறும் காலகட்டத்தில் சித்திரைப் புத் தாண்டும் இடம்பெற இருப்பதால் தமிழ்மொழி புத்துயிர் பெற்று வீடுகளில் முழங்க வேண்டும், அதிகமான இளையர்கள் தமிழில் பேச வேண்டும் என்ற இலக்குடன் இந்த நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் சிரமேற்கொண்டு செய்து வருகிறோம்," என்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார் திரு நசீர் கனி.