தண்ணீரைச் சிக்கனப்படுத்த அறிவுறுத்தல்

தண்ணீரைச் சிக்கனப்படுத்த அறிவுறுத்தல்

1 mins read
89726426-5430-4c46-ac55-d54dfc538982
-

பீஷானில் உள்ள குவோ சுவான் பிரஸ்பித்தேரியன் தொடக்கப்பள்ளியில் நேற்று குழாய்களில் தண்ணீர் வற்றிப்போனது. எனவே, மாணவர்கள் பள்ளி உணவகத்தில் வரிசைப்பிடித்து நிற்க, சிறப்பு விருந்தினராக வந்திருந்த சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஏமி கோர் வாளியிலிருந்து தண்ணீரை மொண்டு ஊற்றி, மாணவர்கள் கைகளைக் கழுவிக் கொள்ள துணை புரிந்தார்.

"சிங்கப்பூரர்கள், குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறையை அல்லது தண்ணீர் பங்கீட்டை அனுபவித்திராத இளைய தலைமுறையினர், தண்ணீரைச் சிக்க னப்படுத்த வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து கருத்தில் கொள்வது முக்கியம்," என டாக்டர் ஏமி கோர் செய்தியாளர் களிடம் கூறினார். இம்மாதம் 3ஆம் தேதி அனு சரிக்கப்பட்ட சிங்கப்பூர் உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒரு மாதகால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 95 பள்ளிகளில் நடத்தப்பட்ட அல்லது நடத்தப்படவிருக்கும் தண்ணீர் பங்கீட்டு நடவடிக் கைகளில் இந்நடவடிக்கையும் ஒன்று.

வாளியில் இருக்கும் தண்ணீரை மொண்டு கைகளைக் கழுவ மாணவி இசபேல் யாப்புக்கு உதவி செய்யும் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஏமி கோர் (வலது). அவர்களுடன் பொது பயனீட்டுக் கழகத்தின் (செயலாக்கப் பிரிவு) துணைத் தலைமை நிர்வாகி திரு டான் யோக் ஜின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்