முஹம்மது ஃபைரோஸ்
வெவ்வேறு சமயத் திருவிழாக்கள் ஒரே நாளில் வந்தாலும் அவற்றை ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் வழக்கம் சிங்கப்பூர் போன்ற ஒரு சில நாடுகளில்தான் பார்க்கமுடி யும் என்று கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் கூறினார். உதாரணத்திற்கு, கிறிஸ்துவர் களால் புனித வெள்ளி அனு சரிக்கப்பட்ட நேற்றைய தினத்தில் இந்துக்களால் பங்குனி உத்திரமும் கொண்டாடப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் நேற்று நடை பெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட திரு ஓங், பின்னர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆலயத்தில் நான்காவது குட முழுக்கு விழா நடைபெற்றதை அடுத்து முதல் பங்குனி உத்திரத் திருவிழாவை பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் நேற்று கோலாகல மாகக் கொண்டாடினர்.
அவ்வகையில், 1962ல் கேன் பரா சாலையில் ஒரு இலந்தை மரத்திற்குக்கீழ் சிறிய வழிபாட்டுத் தலமாக துவக்கம் கண்ட புனித மரம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆல யம், இன்று பக்தர்களுக்காக பல் வேறு வசதிகளுடன் பெரிய ஆலய மாக உருவெடுத்திருப்பதை அமைச் சர் ஓங் நினைவுகூர்ந்தார்.
நேர்த்திக்கடனை வெற்றிகரமாக நிறைவேற்றிய பக்தர் ஒருவரின் அலகுகள் புனிதமரம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயத்தில் கழற்றப்படுவதை கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

