மூன்று வட்டாரங்களுக்கான மறுசீரமைப்பு வடிவமைப்பு

மூன்று வட்டாரங்களுக்கான மறுசீரமைப்பு வடிவமைப்பு

1 mins read
7614d57b-1afd-4aa2-b300-e8b09ff9404e
-

தோ பாயோ, பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங் களைச் சேர்ந்த சுமார் 150 குடியிருப்பாளர்கள் தாங்கள் வாழும் பகுதியில் இருக்கும் பூங்கா இணைப்பு போன்ற சமூக இடங்களைப் பரபரப்பான நடவடிக்கைக்கான இடங்களாக மாற்றி அமைப்பதன் தொடர்பில் வடிவமைப்புப் பயிலரங்கு ஒன்றில் நேற்று பங்கேற்றனர். 'ரீமேக்கிங் அவர் ஹார்ட் லேண்ட்' எனும் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்தப் பயிலரங் குகள் சிங்கப்பூரர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பிரதமர் லீ சியன் லூங் இந்தத் திட்டத்தை 2007ஆம் ஆண்டில் அறிவித்தது முதல் இதுவரை 9 நகரங்களும் பேட்டைகளும் புதுப்பிப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பொங்கோல், டாசன், யீ‌ஷூன் ஆகியன 2007ஆம் ஆண்டிலும் ஈஸ்ட் கோஸ்ட், ஹவ்காங், ஜூரோங் லேக் ஆகியன 2011ஆம் ஆண்டிலும் உட்லண்ட்ஸ், தோ பாயோ, பாசிர் ரிஸ் ஆகியன கடந்த ஆண்டிலும் தேர்வுசெய்யப் பட்டன. உட்லண்ட்ஸ், தோ பாயோ, பாசிர் ரிஸ் ஆகிய பகுதிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மறுசீரமைக்கப்படும். உட்லண்ட் ஸின் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதிவரை பரவியிருக்கும் 4.2 கி.மீ. தூர பூங்கா இணைப்பானது சமூகத் தோட்டங்கள், புதிய நடவடிக்கை இடங்களாக மாற்றம் காணும். உட்லண்ட்ஸ் வட்டாரத்தை மறுசீரமைக்கக் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆறு முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று.

உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகள் மறுசீரமைப்புக்காக வடிவமைத்த படத்தைப் பிடித்தவாறு மக்களோடு உரையாடும் திரு டெஸ்மண்ட் லீ (இடமிருந்து இரண்டாவது), திரு விக்ரம் நாயர் (வெள்ளை நிறச் சட்டையில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்