ஆகாயப் படையின் பொன்விழா கொண்டாட்டம்

1 mins read
3068149c-5d9d-4bb1-8083-8825b7136fb1
-

சிங்கப்பூர் ஆகாயப் படையின் பொன்விழா கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக செம்பவாங் பகுதி யில் பார்வையாளர்கள் 'சூப்பர் பூமா' ஹெலிகாப்டரை நேரில் காணும் வாய்ப்பை நேற்றுப் பெற்றனர். ஆகாயப் படையின் 125 அணி, 1 மருத்துவ அணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல், மீட்புப் பணிகளின் பாவ னைப் பயிற்சியை பொது மக்களுக் குச் செய்துகாட்டினர்.

ஹெலிகாப்டர் இறங்குவதையும் புறப்படுவதையும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். விமானி உட்பட இதர அதிகாரிகளும் தங் களின் பணிகளுக்கு முடுக்கிவி டும் முறை, விபத்து மீட்பு செயல் முறை ஆகியவற்றையும் பொது மக்கள் கண்டனர். வாரயிறுதியில் செம்பவாங் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே உள்ள திறந்த வெளியில் நடந்துவரும் இந்தக் கண்காட் சியில் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நாட்டைக் காக்க ஆகாயப் படையின் செயல்பாட்டுத் தயார் நிலையை சிங்கப்பூரர்கள் அறிந்து கொள்வதற்கு இந்தக் கண்காட்சி உதவும் என்று பாவனைப் பயிற்சி யின் அணித் தலைவர் மேஜர் ராய் சியூ தெரிவித்துள்ளார். 'ஆர்எஸ்ஏஎஃப்50' எனும் பொன்விழா கொண்டாட்டங்களின் பகுதியாக மேலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1985ஆம் ஆண்டு முதன்முதலாக ஆகாயப் படையால் பயன்படுத்தப்பட்ட 'சூப்பர் பூமா' வகை ஹெலிகாப்டர் 'ஆர்எஸ்ஏஎஃப்50' எனும் ஆகாயப் படையின் பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களின் பார்வைக்காக குடியிருப்புப் பேட்டைகளில் பாவனைப் பயிற்சியை நடத்தியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்