சாதனை வர்த்தகர்களுக்கு விருதுகள்

1 mins read
134a7c5e-3cee-4721-8f2a-3a9973a34533
-

வர்த்தகத்தில் சாதனை படைத் ததற்காக நான்கு இந்திய தொழில் முனைவர்களுக்கு நேற்று முன் தினம் விருதுகள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை=டிபிஎஸின் இந்த ஆண்டுக்கான ஆகச் சிறந்த சிங்கப்பூர் இந்தியர் தொழில் முனைவர் விருதை ஓஎம் அசோ‌ஷியட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் குழுமத் தலைமை நிர்வாகியுமான திரு அசோக் கோஸ்லா தட்டிச் சென்றார். ஆண்டுக்கு 10 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக வரு மானம் ஈட்டும் பெரிய நிறுவனங் களுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.

வருடாந்திர வருமானமாக 5 மில்லியன் வெள்ளியிலிருந்து 10 மில்லியன் வெள்ளி வரை ஈட்டும் நிறுவனங்கள் பிரிவின் வளர்ந்து வரும் தொழில் முனைவர் விருதை குதிரைகள் தொடர்பான பொருட் களை விநியோகம் செய்யும் மனோ குதிரைச் சவாரி சேவை நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் திரு மனோகரன் சக்ரபாணி வென்றார். ஆண்டுக்கு 5 மில்லியன் வெள்ளிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் பிரிவின் இவ்வாண்டுக்கான நம்பிக்கை அளிக்கும் தொழில் முனைவர் விருதை தோட்டக்கலை தொடர்பான சேவைகளை வழங் கும் கிரீனோலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு வீர சேகரன் வென்றார்.

(இடமிருந்து வலம்) கே.ஹெச். ஃபோக்ஸின் நிர்வாக இயக்குநர் அனில் தன்பத்லால், ஓஎம் அசோ‌ஷியட்ஸ் நிறுவனர் அசோக் கோஸ்லா, மனோ குதிரைச் சவாரி சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோகரன் சக்ரபாணி, கிரீனோலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீர சேகரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்