முஹம்மது ஃபைரோஸ்
அமைதி, அன்பு, கனிவன்பு ஆகிய நற்பண்புகளைப் போற்றும் விதமாகவும் இன, சமய நல் லிணக்க சமுதாயத்தை உருவாக் கவும் அமைக்கப்பட்ட 'ரோசஸ் ஆஃப் பீஸ்' (அமைதியைப் போற்றும் ரோஜாக்கள்) இயக்கம், தமது சமூகப் பணியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அமைதியைப் பரப்பும் நோக் கில் நீ சூன் குழுத்தொகுதியில் உள்ள வீடமைப்புப் பேட்டைகளில் ஏறக்குறைய 700 ரோஜா மலர் களை விநியோகித்தனர் அந்த இயக்கத்தின் அமைதித் தூதுவர் களும் தொண்டூழியர்களும். அவற்றுடன் சேர்த்து அமைதி, அன்பு, நல்லிணக்கம் போன்ற வற்றை எடுத்துரைக்கும் வாசகங் கள் அடங்கிய வாழ்த்து அட்டை களும் விநியோகிக்கப்பட்டுள் ளன.
ரோசஸ் ஆஃப் பீஸ் இயக்கம் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு ஆதரவு நல்கும் வகையில் நீ சூன் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர்கள் டாக்டர் லீ பீ வா, திரு ஹென்ரி குவேக் ஆகியோர் ரோஜா மலர்களை விநியோகித்தனர்.
ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் ரோஜா மலர்களை விநியோகிக் கும் அமைச்சர் கா. சண்முகம். படம்: பிலிஸ்ஃபுல் ஸ்டூடியோஸ்

